search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு
    X

    வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்.

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு

    • நிலக்கோட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் களுக்கான கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளை சேர்ந்த 13 வார்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் களுக்கான கூட்டம் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையிலும், துணைத் தலைவர் முருகேசன் மற்றும் செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

    கூட்டத்தில் பங்கேற்க வந்த கவுன்சிலர்கள் அனைவரும் தங்களுக்கு துணைத் தலைவர் மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்றும், ஒருமையில் பேசுவதாகவும் கூறி வெளிநடப்பு செய்தனர்.

    தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளை சேர்ந்த 13 வார்டு கவுன்சிலர்கள் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பேரூராட்சி மன்றத் கூட்டத்தில் கவுன்சிலர்களை முறையாக அழைப்பதில்லை. மரியாதையின்றி பேசுகின்றனர்.

    அரசு பொறுப்பில் இருந்துகொண்டு இதுபோல் பேசுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பேரூராட்சி மன்றம் மக்கள் சார்ந்த நலப் பணிகளை செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. எனவே நாங்கள் இதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகதெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கூட்டம் எதுவும் நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் சட கோபி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×