search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
    • தேசிய, மாநில அளவில் நடைபெறுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் குடியரசு தினத்தன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

    கல்லூரி தொடங்கப்பட்ட 2007-ஆம் கல்வியாண்டு முதல் இந்நாள் வரை, படித்த மாணவ-மாணவியர்கள் சந்திக்கும் பொருட்டு நடைபெற்ற இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலர் எட்வின் ஜார்ஜ் தலைமை வகித்தார்.

    தொன் போஸ்கோ முன்னாள் மாணவர்கள் கூட்டமை ப்புப் பற்றியும், அதன் செயல்பாடுகள் உலக மற்றும் தேசிய, மாநில அளவில் நடைபெறுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.

    முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு நிர்வாகம் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அவற்றில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புக் குறித்தும் எடுத்துரைத்தார்.

    துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் ஜான், சமூகப் பணித்துறைப் பேராசிரியர் ஆண்டனி கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவ-மாணவியர் தங்கள் வகுப்புத் தோழர்களையும், தோழிகளையும் சந்தித்து மகிழ்வதற்கும், நலம் அறிவதற்கும், வாழ்வியல் நிலை அறிவதற்கும் ஏற்ற வகையில் அமைந்த இந்நிகழ்வில் மாணாக்கர்கள், ஆசிரி யர்கள், வகுப்பாசிரியர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கல்லூரி காலத்து அனுபவ ங்களையும், தற்போதைய தம்முடைய பணி, குடும்பம், சமூகப் பொருளாதார நிலை முதலியன குறித்த அனுபவங்களையும் தாம் பயின்ற துறையின் வளர்ச்சி க்கும், முன்னேற்றத்திற்கும் உரிய ஆக்கப்புர்வவமானக் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ராஜேஸ்வரி, இயற்பியல் துறைத்தலைவர் சேகர் மற்றும் துறைப் பேராசிரியர்கள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    Next Story
    ×