search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நெட்டையாம் பாளையத்தில் கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம்
    X

    நெட்டையாம் பாளையத்தில் கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    நெட்டையாம் பாளையத்தில் கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம்

    • பரமத்திவேலூர் தாலுகாகபிலர்மலை ஒன்றியம், கொந்தளம் ஊராட்சி நெட்டையாம் பாளை யத்தில் தமிழக அரசின் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு வந்திருந்த 200 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாகபிலர்மலை ஒன்றியம், கொந்தளம் ஊராட்சி நெட்டையாம் பாளை யத்தில் தமிழக அரசின் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில், கால்நடை மருத்துவர்கள் மணிவேல், தனவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுரேஷ் , துரைசாமி, தடுப்பூசி பணியாளர்கள் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமிற்கு வந்திருந்த 200 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டனர்.

    மேலும் கால்நடை விவசா யிகளுக்கு பசுந்தீவன உற்பத்தி, நோய் பரவாமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து எடுத்து கூறினர்.

    இதில், 650-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளித்தனர். முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலை வர் மணிமேகலை பாலு சாமி மற்றும் வார்டு உறுப்பி

    னர்கள் மேகலா மற்றும் முருகேசன் உள்ளிட்ட கிரா மத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×