என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அண்ணா பிறந்தநாள்விழா மாரத்தான் போட்டிக்கு பெயர் பதிய வேண்டுகோள்
- அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 7ந் தேதி காலை 6.00 மணிக்கு அரண்மனைபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து நடைபெறவுள்ளது.
- மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும்.
தேனி:
தேனி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையின் சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 7ந் தேதி காலை 6.00 மணிக்கு அரண்மனைபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் 25 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் போட்டி நடைபெற உள்ளது.
ஓட்டப்போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும்,
மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் கொண்டு வருதல் வேண்டும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை முதல் பக்கம் நகல் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
எனவே போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயதுச்சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை மாலை 6.00 மணிக்குள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்