என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை
- பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
தேனி:
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் பேசுகையில், மாணவர்களிடையே வேலைவாய்ப்பு பெறுவது, கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டொன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் கல்லூரியில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பேராசிரியர்கள் அனைத்து துறை மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு திறனறியும் தேர்வு, குரூப் டிஸ்கசன், எழுத்து தேர்வு, நேர்முக தேர்வை தயக்கமின்றி அணுகுவதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு சிறந்த முறையில் அளிக்கப்பட்டு ஆண்டு தோறும் 80 சதவீதம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று பேசினார்.
விழாவின் போது கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் வேலைவாய்ப்பு துறையின் அறிக்கையினை சமர்பித்தார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களான ஜோஹோ, டேட்டா பேட்டன்ஸ், டி.சி.எஸ், நியாமோ, வெப்ரக்ஸ், ஜோபின்-ஜிஸ்மி. ப்ளிப்ஸ். எஸ்.எம்.ஐ. பின்னக்கல், டீம் கம்யூட்டர்ஸ், டைமண்ட்க்ளாஸ். சுயர்சாப்ட் சொலியூசன்ஸ். ஸ்பைகா டெக், மெலன் வென்சர்ஸ், அப்போலா, டி.என்.டி. ஐ.ஜே.எல், இமெர்ஜ் டெக். க்யூப்-ஸ்கொயர், மேஜிக் ரிச். எட்ரிக்கல் இன்ஜினியரிங், எம்ப்ளையன் எலக்ட்ரா இ.வி. கோ-ஸ்கில், டெஸோமெட்ரிக். நார்டில். எம்.எஸ் சாப்ட்வேர் சொலியூசன்ஸ், கம்யூட்ரா போன்ற நிறுவனங்களில் 81 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றனர். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்
பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி துணை முதல்வர் மாதவன். வேலைவாய்ப்பு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி, பேராசிரியர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்வி நிறுவனங்களின் கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்