search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் திருடுபோன 151 பவுன் நகை, 20 கிலோ வெள்ளி மீட்பு
    X

    மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் திருடுபோன 151 பவுன் நகை, 20 கிலோ வெள்ளி மீட்பு

    • மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் திருடுபோன 151 பவுன் நகை,20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன
    • இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நகை அடகுக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவரை துளையிட்டு நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 151 பவுன் நகைகள் 20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீன்சுருட்டி அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த சங்கர்லால் என்பவரின் நகை அடகுகடையில், சுவரை துளையிட்டு மர்மநபர்கள் சிலர் 209 பவுன் நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் தேடப்பட்டனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தின்மலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(வயது35) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.

    சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவி பிரியா(26) மூலம், கர்நாடக மாநிலம் தும்கூர் கிராமத்தை சேர்ந்த தாசார் கட்டி(42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 பவுன் நகைகள், 20 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்கப்ப ட்டுள்ளன.

    அதே போல், செங்கல்பட்டு மாவட்டம் வைப்பன கிராமத்தை சேர்ந்த ராஜா(34), முருகன்(39) ஆகியோர் ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நிலையில், அவர்களை அழைத்து வந்து விசாரித்ததில், ராஜாவி டமிருந்து 3 பவுன் நகைகள், திருட உபயோ கப்ப டுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் முருகனிடமிருந்து 42 பவுன் நகைகள் மீட்க ப்பட்டுள்ளன. இதையடுத்து ராஜா மற்றும் முருகன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டன.

    இந்த திருட்டு வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு 151 பவுன் நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீட்கப்ப ட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது




    Next Story
    ×