என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூர் நகராட்சியில் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை-கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவிப்பு
- அரியலூர் நகராட்சியில் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவித்தார்
- டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அரியலூர் நகராட்சியில் 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம். இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.