என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் குறைதீர்வு சிறப்பு அமர்வு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது-கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தகவல்
- அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் குறைதீர்வு சிறப்பு அமர்வு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது என கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார்
- ஆண்டிமடம் அண்ணங்காரங்குப்பம் அண்ணா பெரியார் திருமணமண்டபத்தில் இந்த குறைதீர்வு அமர்வு நடைபெற உள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள அண்ணங்கா ரங்குப்பத்திலுள்ள அண்ணா பெரியார் திருமண மண்டபத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு நடைபெறவுள்ளது என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதன் ஒரு மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றியத்தை தேர்வு செய்து வரும் 9 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணியளவில் ஆண்டிமடம் அண்ணங்காரங்குப்பம் அண்ணா பெரியார் திருமணமண்டபத்தில் இந்த குறைதீர்வு அமர்வு நடைபெற உள்ளது.
இந்த அமர்வில் ஆணைய உறுப்பினர் முன்னிலையில், அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொது மக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் தங்களது பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்னைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள், உடல்ரீதியான தண்டனைக்கு உள்ளான குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை கோருவது, ஆதவற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த மனுக்களை இந்த குறைதீர்வு அமர்வில் நேரடியாக கொடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.