search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
    X

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

    • மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • அரியலூரில 540 குழந்தைகள் பயனடைகின்றனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து அங்கு பயிலும் 76 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை பறிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக சின்னவளையம், ஜெயங்கொண்டம் வடக்கு மற்றும் தெற்கு ஆதிதிராவிட நல்ல பள்ளி, செங்குந்தபுரம் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 9 பள்ளிகளை சேர்ந்த 464 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 540 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் மூர்த்தி, கோட்டாட்சியர் பரிமளம், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், வட்டாட்சியர் துரை, நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார், வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி, கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×