search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோ ஆப்டெக்ஸ்-சில் தீபாவளி விற்பனை தொடக்கம்
    X

    கோ ஆப்டெக்ஸ்-சில் தீபாவளி விற்பனை தொடக்கம்

    • ஜெயங்கொண்டம் கோ ஆப்டெக்ஸ்-சில் தீபாவளி விற்பனை தொடங்கியது
    • மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    ஜெயங்கொண்டத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,

    இது குறித்து கலெக்டர் கூறும் போது, நிகழாண்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு, புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் வந்துள்ளன.

    Next Story
    ×