search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் 314 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    அரியலூர் மாவட்டத்தில் 314 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • அரியலூர் மாவட்டத்தில் 314 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி

    அரியலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 314 சிலைகள் பிரஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அரியலூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தா.பழூர்திருமானூர், திருமழபாடி, கீழப்பழுவூர் உள்ளிட்ட 314 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    பிரச்னைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீடுகளிலும்,விநாயகர் சிலைகள் வைத்து, அவல், பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர்.

    அரியலூர் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

    இந்த ஆண்டு 3 முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற பின்பே சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    கீற்று கொட்டகையை தவிர்த்து தகரத்தால் ஆன தகடுகள் அமைத்த கொட்டகையில் தான் சிலைகள் வைக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட முழுவதும் விதவிதமாக கோணத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்ததந்த பகுதி இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×