என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அத்தியாவசியப் பொருள்கள் உரிய காலத்தில் வழங்க வலியுறுத்தல்
- நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் உரிய காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
- தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
அரியலூர்,
அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
கூட்டுறவுத்துறை நிர்வாகத்தில் இயங்கி வரும் நியாய விலை கடைகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் வழங்கப்படுவதில்லை.ஒரு மூட்டை 50 கிலோ என்றால் சாக்கினுடைய எடையும் சேர்த்து 60 கிலோ இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மூட்டைகளில் குறைவான அளவே தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதை நிறை செய்வதற்கு பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்து வருகின்றார்கள். நியாய விலைக் கடைகளுக்கு காலம் தாழ்த்தி பொருள்களை அனுப்புவதினால், பொதுமக்களுக்கு சிக்கல்களும் சிரமங்களும் ஏற்பட்டு வருகின்றன.பொது விநியோகத் திட்டத்தினை ஆய்வு செய்வதற்கு ஆட்சியர்கள், அமைச்சர்கள், கூட்டுறவுத் துறை செயலாளர்கள், மாவட்ட இணைப் பதிவாளர்கள் என 21 அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனாலும், ஆய்வுகள் அதிகரித்து இருப்பதை தவிர சரியான எடையில் பொருள்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை.
எனவே தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நியாய கடைகளுக்கு உரிய காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல எடை குறைவாக வழங்காமல் இருப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.எடை குறைவாக பொருளேகளை வழங்கிவிட்டு அதற்குப் பிறகு ஆய்வு செய்து, இருப்பு குறைவு என்று பணியாளர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடிய நிலை நாடு முழுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த விசயத்திலும் தமிழக முதல்வர் தலையீட்டு தீர்வு காணவேண்டும் என்றார்.