search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குடும்ப நிகழ்வுகளை தமிழ்வழியில் நடத்த வேண்டும் - இயக்குனர் வி.சேகர்
    X

    குடும்ப நிகழ்வுகளை தமிழ்வழியில் நடத்த வேண்டும் - இயக்குனர் வி.சேகர்

    • அரியலூரில் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தமிழ் படைப்பாளிகள் விழா
    • பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

    அரியலூர், அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு, பல்துறை நிபுணர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது. உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சிவபாண்டியன் தலைமை தாங்கினார்.விழாவில் திரைப்பட இயக்குநர் வி.சேகர் கலந்துகொண்டு பேசியதாவது:-மனிதனுக்கு மனிதன் கூறிய ஒரே நூல் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். திருக்குறள் பெரும்பாலான இந்திய மொழிகளிலும் 170-க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் நூலுக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு. திருக்குறள் நூலானது உலக மக்களுக்காக இயற்றப்பட்டது.

    அதனால் திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களையும் படித்து அதனுடைய கருத்தை தெரிந்துக்கொண்டு வாழ்வை சிறப்பாக பயணியுங்கள். மேலும் தமிழர்கள் ஒவ்வொருவர் இல்லங்களிலும் தமிழ் வழியில் குடும்ப நிகழ்வுகளை நடத்த வேண்டும். பட்டி, தொட்டி எல்லாம் திருக்குறளின் புகழை தமிழர்கள் பரப்ப வேண்டும் என்றார்.சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா பேசுகையில், திருக்குறளை ஒவ்வொரு குடும்பத்தினரும் பின்பற்றி நடக்க வேண்டும் . திருக்குறளில் சொல்லப்படாத அறநெறிகள் இல்லை. திருக்குறளை ஒருவன் தெளிவாக கற்றால் வாழ்நாளில் எத்தகைய துன்பமும் நேராது. பள்ளி குழந்தைகள் திருக்குறளை விரும்பி கற்று அதன் பொருள் உணர்ந்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.விழாவில் மாநில பொதுச் செயலர் ஆதிலிங்கம், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பிச்சி ஆதிலிங்கம், மண்டல தலைவர்கள் சின்னதுரை, இளங்கோ, சந்திரன், செவ்வேல், சுப்பிரமணியன், செல்ல பாண்டியன், இளவரசன், ஷோபனா மற்றும் காவல் ஆய்வாளர்கள் அனிதாமேரி, செல்வகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும், பல்துறை நிபுணர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தர்ராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்டச் செயலர் நாகமுத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×