என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அைழப்பு
- சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- கால நிலை மாற்றங்களால் நஷ்டங்களை தவிர்க்க வேண்டும்.
அரியலூர்:
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் ரபி பருவம் 2022-23ல் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கேட்டு–க்கொள்ளப்படுகிறது.
மேலும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இது பாதிப்புகளிலிருந்து வாழ்வாதரத்தினையும், பொருளாதார இழப்பினை–யும் பாதுகாக்க காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டு–க்கொ–ள்ளப்படு–கிறது.
பயிர் காப்பீடு செய்வ–தற்கு ஆதார் அட்டை நகல், வங்கி களாக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி தகவல்களுடன் கூடிய பாஸ் புக்கின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நகல், நடப்பு பயிர் சாகுபடி அடங்கல், முன் மொழிவுப் படிவம் ஆகியவற்றை கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு கட்ட–ணம் செலுத்தலாம்.
பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தில் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.885 பிரிமியம் செலுத்திட கடைசி நாள் : 28.12.2023 செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டு–க்கொள்ள–ப்படுகிறது.
எனவே விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து கால நிலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க வேண்டும்.
மேலும் சம்மந்த–ப்பட்ட வட்டார அலுவல–ர்கள்சிவகுமார், துணை தோட்டக்கலை அலுவலர், அரியலூர்-9943841155,
சந்தியா, தோட்டக்கலை அலுவலர், திருமானூர் 8760531338, தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள–லாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்க–ப்பட்டுள்ளது.