search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாம்
    X

    இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாம்

    • அரியலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெறுகிறது
    • 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், தளவாய் கிராமம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் 24ந்தேதி காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி. பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு இரத்த பரிசோதனையும் கட்டணமின்றி செய்து கொள்ளலாம். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறுப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயர்வேத மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். எனவே, இம்மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரிய லூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யின் முதல்வர் முத்து கிரு ஷ்ணன், பொது சுகாதார துணை இயக்குநர் செந்தி ல்குமார், துணை இயக்கு நர்கள்இளவரசன், சுதாகர், வருவாய் கோட்டாட்சி யர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×