search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
    X

    உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

    • ஜெயங்கொண்டத்தில் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது
    • முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெயங்கொண்டம் தெற்கு பள்ளிகளில் கல்லூரி கனவு 2023 என்ற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என பள்ளிக்கு 11 பேர் கலந்து கொண்டார்கள்.பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வி, மீரா தேவி, பிளாரன்ஸ், இஸபெல்லா கருத்தாளர்களாக பயிற்சி வழங்கினர்.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜ பிரியன், உதவிதிட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எழில்வளவன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் செய்திருந்தார்.

    தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட பயிற்சியினை உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையேற்று தொடங்கி வைத்தார். கருத்தாளர்களாக அரசினர் கலைக்கல்லூரி விரிவுரையாளர் மேரி வயலட் கிறிஸ்டி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசைத்தம்பி, கார்த்திகேயன், அகிலா ஆகியோர் செயல்பட்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா நன்றி கூறினார்.

    Next Story
    ×