search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போலீசார் குறித்து தவறாக  பதிவிட்டால் நடவடிக்கை -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
    X

    போலீசார் குறித்து தவறாக பதிவிட்டால் நடவடிக்கை -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

    • போலீசார் குறித்து தவறாக பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    • சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காவல் துறையினர் மீது தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 7-ந் தேதி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை திசை திருப்பும் விதமாக காவல் துறையினர் குறித்து தவறான பிரசாரங்களை பல்வேறு இந்து இயக்கங்கள் மூலம் சிவனடியார் மீது தாக்குதல் என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரங்களை செய்து வருவதாக தெரியவருகிறது.இது போன்ற பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று மதத்தின் பெயரால் மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது சுயலாபத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×