search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமானூரில் ஜல்லி கட்டு
    X

    திருமானூரில் ஜல்லி கட்டு

    • மாசி மக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • 621 காளைகள், 166 காளையர்கள் கலந்து கொண்ட ஜல்லிகட்டு

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தார்.துவக்க விழா நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டார்.திருமானூர் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் சீமான் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, விழாக்குழு நிர்வாகிகள் முருகானந்தம், மதிவாணன், கிஷோர், நரசிம்மன், சூரியமூர்த்தி, திருவேங்கடம், ராஜேந்திரன், ஆனந்தன் மற்றும் பலர் உள்ளிட்டோர் ஏற்பாடுசெய்திருந்தனர்இப்போட்டியில், 621 காளைகள் மற்றும் 166 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொண்டுள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயம் ஏற்பட்டது. அவர்களில் பரத் என்கிற நபர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருமானூர் ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கு கட்டுப்படாமல் ஓடிய ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும், ரொக்கப் பணம் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் விழா குழு சார்பில் வழங்கப்பட்டன.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபார்த்திபன் உள்பட ஏராளமானோர், பார்வையாளர்களாக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை ப்பராமரிப்புத்துறை) கிரிஸ்டோபர், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், திருமானூர் ஊராட்சி மன்றத் தலைவர் உத்திராபதி மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவ அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அரியலூர் போலீஸ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவில் சுமார் நான்காயிரம் பேர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×