search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்ஸ்மீபெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
    X

    இன்ஸ்மீபெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

    • தா.பழூர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது
    • மறியலில் ஈடுபட்ட பெண்களை தாக்கியதாக எஸ்.பி.யிடம் புகார் மனு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பேருந்து வசதி கேட்டு அமைதியான முறையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கிய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், காவல் நீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம், ஸ்ரீபுரந்தான் ஊராட்சித் தலைவர் இரா.உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி டி.தண்டபானி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில், ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக முத்துவாஞ்சேரி கிராமத்துக்கு செல்வதற்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சரியான முறையில் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் முத்துவாஞ்சேரி, காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், அணைக்குடி, அறங்கோட்டை, அருள்மொழி உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், மருத்துவமனை, பள்ளி}கல்லூரி என அனைத்துக்கும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால் மேற்கண்ட நேரங்களில் இயங்க வேண்டிய பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த 7 ஆம் தேதி தா.பழூர் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட சித்திரவேல் மனைவி விஜபபாரதி, சிங்குராஜ் மனைவி சாந்தி, தமிழ்மணி மனைவி சாவித்திரி உள்ளிட்டோரை, தா.பழூர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் கண்ணத்தில் அறைந்தது மட்டுமல்லாமல், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இதே போல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, காவலர் மணி ஆகியோரும் பெண்களை தரக்குறைவான வார்த்தையால் திட்டி 10}க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.எனவே, காவல்துறையின் கண்ணியத்தையும், நற்பெயரையும் கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, காவலர் மணி மற்றும் பெயர் தெரியாத காவலர்கள் மீது காவல் கண்காணிப்பாளர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×