search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
    X

    அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

    • அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது
    • தா.பழூரில் இன்று நடக்கிறது.

    அரியலூர்

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தின் தொலை தூரத்தில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 5-ம் கட்டமாக தா.பழூர் குறுவட்டத்திற்கு தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்றும் (வியாழக்கிழமை), கீழப்பழுவூர் குறுவட்டத்திற்கு கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைப்பெறும். இம்முகாமில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். அந்த சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது"

    Next Story
    ×