search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயில்களில் சிறப்பு வழிபாடு
    X

    கோயில்களில் சிறப்பு வழிபாடு

    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
    • தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்றது

    அரியலூர்,

    தமிழ் புத்தாண்டையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுபகிருது ஆண்டு முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டான பெரும்பாலான இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோதண்டராமசாமி திருக்கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சித்திரை மாதம் தொடங்கியதையடுத்து அக்கோயிலுள்ள ஐயப்பனுக்கு விஷ்ணு கனி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், திருமனூர் ஆலந்துரையார் கோயில், திருமழபாடி வைத்திய நாதசுவாமி திருக்கோயில் மற்றும் செந்துறை, கீழப்பழுவூர், மேலப்பழுவூர், உடையார்பா ளையம்,ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், பொன்பரப்பி, வி.கைகாட்டி, மீன்சுருட்டி, ஆர்.எஸ்.மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் கோயில், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் மேற்கண்ட கோயில்களில் அன்ன தானமும் வழங்க ப்பட்டன. ஏரளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.பால்குட திருவிழாவையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகர் கோயிலிலிருந்து நூற்றுக்கண க்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அலங்கரிக்கப்பட்ட உத்ஸவர் பெரியநாயகி அம்மனுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. வீடுகள் தோறும் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.

    Next Story
    ×