search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும்-மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி பேச்சு
    X

    நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும்-மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி பேச்சு

    • நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி பேசினார்
    • உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு,மாவட்ட காவல் துறை, சர்வதேச நீதிக் குழுமம், சென்னை ரைஷ் சமூக சேவை ஆகியவை இணைந்து நடைத்திய மனிதகடத்தல் எதிர்ப்பு மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். மகாலட்சுமி பேசியது:-கொத்தடிமை முறைக்கு எதிராக அதிகளவில் குற்றச்சாட்டுகள் வெளியு லகத்திற்கு வருவதில்லை. மேலும் கடுமையான தண்டனைகள் இந்த கொடு ஞ்செயலைச் செய்பவருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் இக்குற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    கொத்தடிமை முறையை ஓழிப்பதற்காக இந்தியாவில் 1976-இல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக கொத்தடிமைகளுக்கு உடனடியாக ரூ.1,000மும் அடுத்ததாக ரூ.19, 000மும் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது அவர்களின் மறுவாழ்வு க்காக வோளாண் நிலமும் அளிக்க வேண்டும். மீட்கப்ப டுபவர்களுக்கு மறுவாழ்வு வசதிகள் மற்றும் திட்டங்கள் (வாழ்வாதாரத் திட்டங்கள், ரேஷன் கார்டு, வீட்டு வசதி, அடையாள அட்டை போன்ற அனைத்தும்) கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மீட்கப்படுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களை குழந்தை நல குழுவிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய மனநல ஆலோசனைகளும் மருத்துவ சட்ட உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பாலியல் ரீதியான துன்புறத்தல் இருந்தாலோ அல்லது மனித கடத்தல் இருந்தாலோ அதையும் இணைத்து விசாரிக்க வேண்டும். மேலும், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

    மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் அழகேசன் ,காவல்துறை ஆய்வாளர்கள் கலா, கார்த்திகேயன் மற்றும் இந்திய நீதிக் குழுமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பிரபு, எ.மிக் ஓஸ்டின், ரைஷ் சமூக சேவை நிர்வாக இயக்குநர் அருள்தாஸ் ஆகியோர் பேசினர்.முன்னதாக அக்கல்லூ ரியின் முதல்வர் மலர்விழி வரவேற்றர். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட கூடுதல் காவல கண்காணி ப்பாளர்கள் (இணைய குற்றப்பிரிவு)ரவிசேகரன், மதுவிலக்கு அமல்பிரிவு காமராஜ் ஆகியோர் முன்னிலையில், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதே போல் மாவட்ட த்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்த காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


    Next Story
    ×