search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
    X

    சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

    • சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் சந்திராகனகராஜ் தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் அபிராமி, மணிகண்டன், ஜெயபிரீத்தி, கால்நடை ஆய்வாளர்கள் முருகானந்தம், முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிச்சைபிள்ளை, செல்வராஜ், வசந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, 180 பசுக்கள், 300 வெள்ளாடுகள், 60 செம்மறியாடுகள், 200 கோழிகள் மற்றும் நாள்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் மாடுகளுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக சினைப் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் கிடேரிகள் மற்றும் பலமுறை கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காத எட்டு மாடுகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அவற்றிற்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வாறான கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×