search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    அரியலூரில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • அரியலூர் மாவட்டத்தில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அளிக்கும் மனுக்களின் மீது அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதே போன்று கல்வி, மருத்துவ உதவிக் கேட்டு வரும் மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கும் மனுக்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். துறை சார்ந்த கோரிக்கைகள் தமிழக முதலவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    முதல்வர் தெரிவித்ததை போன்று ஏழை, எளிய மக்கள் அளிக்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக உணர்ந்து பார்ப்பதுடன் அவர்களது மனுக்களை நிராகரிக்காத வகையில் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

    முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் உதயநிதி, அவ்வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள சிவசங்கர், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, அரசு சிறப்பு திட்ட செயலாகத்துறை செயலர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×