search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரதநாட்டியம் ஆடி பாராட்டைப் பெற்ற 12வயது சிறுமி.
    X

    பரதநாட்டியம் ஆடி பாராட்டைப் பெற்ற 12வயது சிறுமி.

    • சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியம்
    • 12வயது சிறுமி பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்


    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சுவாமிமலை முருகன் கோயிலில் சிவராத்திரி அன்று நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பரதநாட்டியம் சிறப்பாக ஆடி அசத்திய 7 ஆம் வகுப்பு மாணவியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது முதலே பரதநாட்டியத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால் அவரது பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் குரு சக்தி செல்லதுரை வி.பி.எஸ் கலைக்கூடம் மூலம் பயிற்சி கொடுத்தனர்.சிறுமி ஓவியாவும் ஆர்வத்துடன் பரதநாட்டியத்தை கற்றுக் கொண்டார். மேலும் பள்ளிகளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடி தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் சிவராத்திரி அன்று மாலை நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இவரது நடனத்தில் அனைத்து பாவனைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி நடனமாடினார். இதனை மெய்மறந்து பார்த்த சக நடன கலைஞர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவி ஓவியாவின் பரதநாட்டியத்தை பார்த்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்,




    Next Story
    ×