search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்காலம்
    X

    அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்காலம்

    • அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்காலம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிகழாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால் அனைத்து மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிறுக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு அ அல்லது ஆ சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

    மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மேலும் இது குறித்த விவரங்களை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×