search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓசூர் அதியமான் கல்லூரியில்மின்சார வாகனம் தயாரிக்கும் முறை பற்றிய பயிற்சி
    X

    ஓசூர் அதியமான் கல்லூரியில்மின்சார வாகனம் தயாரிக்கும் முறை பற்றிய பயிற்சி

    • “மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்து வதனால் சுற்றுப்புறம் பாதுகாப்பதோடு பொருளாதாரமும் சேமிக்கப்படுகிறது என்றார்”.
    • மின்சார வாகனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை செயல் விளக்கம் காட்டி மாணவர்கள் மனதில் மின்சார வாகன தயாரிப்பு மீது ஆர்வத்தை ஊட்டினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியும், ஓசூர் லீப் இ-டிரைவ் நிறுவனமும் இணைந்து மின்சார வாகனம் தயாரிக்கும் முறை பற்றிய பயிற்சி பட்டறையை 2 நாட்கள் நடத்தின.

    கல்லூரியின் கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முன்னதாக, , இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.

    அதியமான் கல்லூரியின் முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி பேசுகையில், "மாசுபாடு இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மத்திய, மாநில அரசுகளும் நிதி கொடுத்துத் திட்டங்களுக்கு ஊக்கம் அளித்துவருகிறது. ஆகவே, மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஓசூர், லீப் இ-ட்ரைவ் நிறுவன இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமானுஜம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,

    "மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்து வதனால் சுற்றுப்புறம் பாதுகாப்பதோடு பொருளாதாரமும் சேமிக்கப்படுகிறது என்றார்".

    மேலும், மின்சார வாகனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை செயல் விளக்கம் காட்டி மாணவர்கள் மனதில் மின்சார வாகன தயாரிப்பு மீது ஆர்வத்தை ஊட்டினார்

    இப்பயிற்சி பட்டறையில், 200- க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

    பயிற்சி பட்டறையை, இயந்திர பொறியியல் துறை மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முடிவில், எந்திர பொறியியல் துறைத் தலைவர் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.

    Next Story
    ×