search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு  கோவில் விழாவில்  எருது விடும் விழா
    X

    எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை படத்தில் காணலாம்.

    பாலக்கோடு கோவில் விழாவில் எருது விடும் விழா

    • 7 கிராமங்களை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டது.
    • காளை முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிக்காரதனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ கரக செல்லியம்மன் செல்லப்பன் கோவில் மண்டு திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது.

    இத்திருவிழாவின் கடைசி நாளான நேற்று எருது விடும் நிகழ்ச்சியில் சிக்கார்தணஅள்ளி, மாக்கன்கொட்டாய், எண்டப்பட்டி, கோடியூர், மாதம்பட்டி, திம்மம்பட்டி காலணி, தொட்டார்தனஅள்ளி உள்ளிட்ட7 கிராமங்களை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கிராம மக்கள் மேள தாளங்களுடன் குல வழக்கப்படி கோபூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த பின் ஊர் கவுண்டரால் காளைகள் விடப்பட்டது.

    அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கோவிலில் விடப்பட்டன. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.

    இதில் காளை முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர்.

    பொதுமக்களின் நலன் கருதி பாலக்கோடு போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×