என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடியிருக்கும் நிலத்தை அபகரிக்க முயற்சி: பஞ்சாயத்து துணை தலைவரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற பெண்
- இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கலையரசி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார்.
- கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டா நூலஅள்ளி அருகே உள்ள எம். சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி கலையரசி (வயது 32).
இவர்கள் 25 வருடமாக அந்தப் பகுதியில் உள்ள 7 சென்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும் அந்த இடத்தை மிட்டாநூல அள்ளியின் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருவதாகவும், வீட்டில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்காக வீட்டை சுற்றி வேலி அமைத்து தொல்லை தருவதாகவும் இது சம்பந்தமாக தருமபுரி கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகம், பொருளாதார குற்றப்பிரிவு, அதியமான் கோட்டை காவல் நிலையம், உள்ளிட்ட இடங்களில் மனு கொடுத்தோம்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கலையரசி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட ர்.
கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது