search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

    • கல்வி அழியாத செல்வம் என்றும் விழிப்புணர்வு வாசங்களை ஏந்தி சென்றனர்.
    • பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

    மதுக்கூர்:

    தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகின்றது.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காடந்தகுடி ஊராட்சியில் கோட்டைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதனை அடுத்து மாணவர் சேர்க்கை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கான பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

    இந்த பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்பு உரையாற்றினார்.

    உதவி தலைமை ஆசிரியை அற்புதமேரி வழி மொழிந்தார்.

    இதனை அடுத்து ஆசிரியர் பயிற்றுநர் வீரப்பராஜா பேரணியை துவங்கி வைத்தார்.

    இந்த பேரணி பள்ளியிலிருந்து துவங்கி வடக்கு கோட்டை காடு, தெற்கு கோட்டை காடு என சிரமேல்குடி ரோடு வழியாக மறுபடியும் திரும்ப பள்ளியை வந்து அடைந்தது.

    இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கல்வி அனைவருக்கும் முக்கியத்துவம் பற்றியும் குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்க வேண்டும் என்றும் கல்வி அழியாத செல்வம் என்றும் பல்வேறு வகைகளில் முன்மொ ழிந்தபடி சென்றனர்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கைலாசம், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வடிவேல், எஸ் எம் சி தலைவி சங்கரி, உதவி தலைவி சுபாதிகா என பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் பெற்றோர்கள் ஊர்மக்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×