என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் பைகளை வடிகால் வாய்க்காலில் போடுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுறுத்தல்
- பிளாஸ்டிக் பைகளை வடிகால் வாய்க்காலில் போடுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற தூய்மைப் பணிகளையும், கா.மாமனந்தல்சாலையில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதையும் ஆய்வு செய்தார். பின்னர், கா.மாமனந்தல் சாலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுவரும் களப்பணியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே உள்ள வடிகால் வாய்க்கால், கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், வடிகால் வாய்க்கால்களில் நெகிழிப் பைகளை போடுபவர்களை கண்டறிந்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை உரப்பூங்கா, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு, அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை அன்றே தரம் பிரித்து உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யும் பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகரமன்ற தலைவர் சுப்புராயலு, நகராட்சி ஆணையாளர் குமரன், நகராட்சி பொறியாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்