search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்  அடிப்படை வசதி கேட்டு  முற்றுகைப் போராட்டம்
    X

    முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி கேட்டு முற்றுகைப் போராட்டம்

    • மாணவர்களுக்கான அடிப்படை தேவைகளான கழிவறை வசதி, அவற்றில் போதிய அளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கக் கோரியும் 12 ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மாற்றப்படாததை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
    • இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாலப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான கழிப்பிட வசதி, போதிய அளவு தண்ணீர் வராமல் இருப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தலைமையாசிரியரை அவரது அறையில் வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    மாணவர்களுக்கான அடிப்படை தேவைகளான கழிவறை வசதி, அவற்றில் போதிய அளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கக் கோரியும் 12 ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மாற்றப்படாததை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 10-ந் தேதிக்குள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவ மாணவியர்களின் கழிவறைக்கள் குறித்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைமை ஆசிரியர் உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×