search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டம்
    X

    உடன்குடியில் வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டம்

    • புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை தேர்தல் அதிகாரியாக இருந்து திருணாகரன் நடத்தினார்.
    • காலியானஇடங்களில் மீண்டும் வெற்றிலை விவசாய பயிர்களை பயிரிட வேண்டும். உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 69-வது வருட ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள சங்கவளாகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஜெகதீசன் வரவேற்று பேசினார். சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்கசெயலாளர் மங்களராஜ் சங்கத்தின் வரவு செலவு மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை தேர்தல் அதிகாரியாக இருந்து திருணாகரன் நடத்தினார். மீண்டும் பழைய தலைவர், பொருளாளர், செயலாளர் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    சங்க உறுப்பினர்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். ஊர் கூடி ஊரணி அமைப்போம் தொண்டு நிறுவனம் சார்பில் புதியதாக பல குளங்கள் உருவாகியதால், நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் சங்க உறுப்பினர்கள் தங்களது வீடு மற்றும் தோட்டங்களில் உள்ள காலியானஇடங்களில் மீண்டும் வெற்றிலை விவசாய பயிர்களை பயிரிட வேண்டும்.

    தாம்பூல கவர் மற்றும் விசேஷ காலங்களில் வெற்றிலையை பயன்படுத்த வேண்டும் என்றும், புகையிலை இல்லாத வெற்றிலையின் பயன்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வெற்றிலை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×