search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில்  புதிய அரசு கலைக் கல்லூரி கட்ட பூமிபூஜை
    X

     அரசு கல்லூரி கட்ட பூமிபூஜை நிகழ்ச்சியை அமைச்சர் காந்தி, தொடங்கி வைத்த காட்சி. அருகில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், செல்லகுமார் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ராமச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

    தேன்கனிக்கோட்டையில் புதிய அரசு கலைக் கல்லூரி கட்ட பூமிபூஜை

    • நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்
    • மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு, இக்கல்லூரி முத்தாய்ப்பாக அமையும்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளியில் ரூ.14.74 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கட்டுமான பணிகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், மலை வாழ்பகுதி மாணவ, மாணவிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில், தளி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிக அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தை, கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி, சென்னை தலைமை செய லகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.

    இக்கல்லூரியில் தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு, தற்போது தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் ரூ.14.74 கோடியில் கட்டுமான பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்கல்லூரி 4809.29 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு, இக்கல்லூரி முத்தாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், செல்லகுமார் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ராமச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் ஓசூர் சப்கலெக்டர் சரண்யா, தருமபுரி மண்டல உயர்கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி, தளி அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாறன், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன் னாள் எம்எல்ஏ முருகன், தாசில்தார் சரவணமூர்த்தி, பிடிஓக்கள் கோபாலகிருஷ்ணன், விமல்ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×