search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.45 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை
    X

    ரூ.1.45 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை

    • வெயிலில் நின்று பஸ்சில் ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
    • நிழற்கூடம் அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரன் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை ஊராட்சி, தேவரசம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், நோயாளிகள் பஸ்சுக்காக செல்ல தேவர சம்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வருகின்றனர். அவர்கள் வெயிலில் நின்று பஸ்சில் ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரன் நிதி ஒதுக்கீடு செய்தார். அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார். இதேபோல்

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் வரையுள்ள பழுதடைந்த கிராம சாலையை முதல்-அமைச்சர் கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1கோடி 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலையாக அமைக்கும் பணிக்கு எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ம.க. கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×