search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அருகே சாக்கடை கால்வாய் அடைப்பால் சுகாதார சீர்கேடு
    X

    கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    கம்பம் அருகே சாக்கடை கால்வாய் அடைப்பால் சுகாதார சீர்கேடு

    • கம்பம் சின்ன வாய்க்கால் தெரு சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டின் ஓரம் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • சாக்கடை கால்வாயை தூர்வாரி தூய்மை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கம்பம்:

    கம்பம் சின்ன வாய்க்கால் தெரு சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டின் ஓரம் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தூர் வாரி தூய்மை படுத்த நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் சின்னவாய்க்கால் தெருவின் ரோடு சுருளி அருவிக்கு பேருந்துகள் செல்லும் முக்கிய பிரதான சாலையாகவும், தனியார் பள்ளிக்கு மாணவர்கள் தினமும் சென்று வரும் வழியாக பயன்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காந்தி சிலை கீழ்புறம் சுருளி அருவி செல்லும் பாதையின் இடது புறத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பல நாட்களாக தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசிக்கொண்டு கொசு மற்றும் வால்புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்று சுகாதார கேடான நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து சாக்கடை கால்வாயை தூர்வாரி தூய்மை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×