என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் தாயை தாக்கிய என்ஜினீயரை குத்தி கொன்ற தம்பி கைது
- செந்தில்குமார் தனது தாய் பாப்பாத்தியிடம் மது குடிக்க பணம் கேட்டார்
- முத்துக்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது அண்ணன் செந்தில்குமாரின் வயிற்றில் குத்தினார்.
குனியமுத்தூர்:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மாச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். மேலும் மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானார்.
செந்தில் குமார் தனது மாமா சீனிவாசன் என்பவரது வீட்டில் தனது தாய் பாப்பாத்தி, சித்தி ராணி தம்பி முத்துக்குமார்(28) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் தினசரி மது குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
நேற்று செந்தில்குமார் தனது தாய் பாப்பாத்தியிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது தாயை தாக்கினார்.
இதனை பார்த்த அவரது தம்பி முத்துக்குமார் தடுத்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது அண்ணன் செந்தில்குமாரின் வயிற்றில் குத்தினார். நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இறந்த செந்தில்குமாரின் மாமனார் சீனிவாசன், தாய் பாப்பாத்தி, சித்தி ராணி மற்றும் தம்பி முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தாயை தாக்கிய ஆத்திரத்தில் செந்தில்குமாரை குத்தி கொலை செய்ததாக அவரது தம்பி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்