search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1500 பணத்துக்காக கொலை: மது குடிப்பதற்காக மூதாட்டியை கொன்று கொள்ளையடித்தேன்- வாலிபர் வாக்குமூலம்
    X

    ரூ.1500 பணத்துக்காக கொலை: மது குடிப்பதற்காக மூதாட்டியை கொன்று கொள்ளையடித்தேன்- வாலிபர் வாக்குமூலம்

    • மூதாட்டியிடம் பணம் கேட்டு வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூபாய் 1500 பணத்தை பிடுங்கிச் செல்லுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • அர்ஜுன் மீது பல்வேறு செல்போன், செயின் பறிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ராமன் பிள்ளை தெருவில் கடந்த 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் 108 அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த தகவலின் பெயரில் ஐஸ் அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மூதாட்டி கடந்த 14-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தார் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

    இதில் மது போதையில் வயதான மூதாட்டியிடம் பணம் கேட்டு வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூபாய் 1500 பணத்தை பிடுங்கிச் செல்லுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருவல்லிக்கேணி, நீலம் பாஷா தர்காவை சேர்ந்த அர்ஜுன் (எ) அஜி (வயது 30) மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அர்ஜுனை போலீசார் கைது செய்தனர்.

    அர்ஜுன் மீது பல்வேறு செல்போன், செயின் பறிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கைதான வாலிபர் அர்ஜூன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் போதையில் இருந்த தான் மேலும் மது குடிப்பதற்காக மூதாட்டியை கொடூரமாக தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மூதாட்டியை அவர் தாக்கும் வீடியோ காட்சிகள் பதை பதைக்க வைக்கும் வகையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×