search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ரெயில் என்ஜினில் சரக்கு பெட்டி உரசியது- காட்பாடியில் பரபரப்பு
    X

    சென்னை ரெயில் என்ஜினில் சரக்கு பெட்டி உரசியது- காட்பாடியில் பரபரப்பு

    • ரெயில் இயக்கியபோது என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது.
    • ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து, அசாம் மாநிலத்திற்கு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்னை நோக்கி புறப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பொருட்கள் இருப்பு வைக்கும் சரக்கு பெட்டியில் பழம் நிரப்பப்பட்ட பெட்டிகள் மற்றும் பழ மூட்டைகள் ஏற்றப்பட்டன.

    அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றுமதி செய்யப்பட்டதால், ரெயில் இயக்கியபோது என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் ரெயில் மெதுவாக சென்றது.

    இதுகுறித்து எஞ்சின் டிரைவர் காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்ததும் நிறுத்தப்பட்டது.

    அப்போது தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சரக்கு பெட்டியில் இருந்த பழ மூட்டைகளை பாதி இறக்கினர்.

    இதனையடுத்து ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×