search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் சாலையின் நடுவே சுற்றி திரியும் கால்நடைகள்
    X

    கோத்தகிரியில் சாலையின் நடுவே சுற்றி திரியும் கால்நடைகள்

    • கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.
    • சாலையின் குறுக்கே வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் அதன்மீது மோதாமல் இருக்க திருப்பும் போது சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஏராளமானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் சாலைகளிலும், மார்க்கெட் பகுதிகளிலுமே சுற்றி திரிகிறது.

    அப்படி சுற்றி திரியும் கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.

    மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள் கடைகள் முன்பு வைத்துள்ள காய்கறிகளை சாப்பிடுகின்றன. அங்கிருந்து விரட்டி விட்டாலும் எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி திரிகிறது. இதேபோல் பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் புகுவதால், பள்ளி மாணவர்கள் பயந்து ஓடுகின்றனர்.

    மேலும் சாலைகளில் சுற்றி திரிவதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். திடீரென சாலையின் குறுக்கே வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் அதன்மீது மோதாமல் இருக்க திருப்பும் போது சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது. நடந்து செல்லும் மக்களையும் துரத்தி செல்கின்றன.

    எனவே சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை சம்பந்தப்பட்ட துறையினர் பிடித்து உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். மேலும் சாலைகளில் மாடுகளை சுற்ற விடுபவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×