search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளுதியூர் வாரசந்தையில்  ரூ.38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
    X

      புளுதியூர் சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பசு மாடுகளை படத்தில் காணலாம்.

    புளுதியூர் வாரசந்தையில் ரூ.38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

    • வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டை கனை வாங்க வருகின்றனர்.
    • நேற்றைய சந்தை யில் ரூ.38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திரு வண்ணா மலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டை கனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ரூ. 8,200 முதல் ரூ. 37,700 வரையும். ஆடுகள் விலை ரூ. 5,500 முதல் ரூ.10,000 வரையும், நேற்றைய சந்தை யில் ரூ.38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×