என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விக்கிரவாண்டி அருகே செல்போன் திருடன் கைது
- சந்தேகப்படும்படியாக கையில் பையுடன்நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
- 14 திருட்டு வழக்குகள் சென்னை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவது தெரியவந்தது
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து போலீசார் வீரராஜ் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும்படியாக கையில் பையுடன்நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்தார். இந்நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த மேகநாதன் (வயது34) என தெரிய வந்தது. இவர் பையை சோதனை செய்த போது செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமாணவர்கள் விடுதியில் செல்போன்கள் திருடியதாக தெரியவந்தது. இவரிடம் இருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலும் இவர் மீது 14 திருட்டு வழக்குகள் சென்னை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவது தெரியவந்தது . பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.