search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில்  ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
    X

    எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். 

    தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழப்பட்டது.
    • நூற்றுக்கு நூறு திட்டத்திற்காக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடந்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், மற்றும் நூற்றுக்கு நூறு திட்டத்திற்காக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் இந்த ஆண்டு தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்து நூற்றுக்கு நூறு தேர்ச்சி இலக்கினை அடையுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

    அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் கல்வித்துறையில் சிறப்புத் திட்டமான எண்ணும் எழுத்தும் பயிற்சி 2022-23-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1386 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டமானது 2025-ஆம் கல்வியாண்டில் அனைத்து 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகள் செய்வதும் இத்திட்டத்தின் இலக்காகும்.

    இத்திட்டத்தில் 2 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை அறிதல் மதிப்பீட்டினை தமிழ்நாடு பள்ளிக் கல்வி செயலி வழியாக சார்ந்த வகுப்பாசிரியர்கள் செய்து மாணவர்களின் கற்றலை அரும்பு, மொட்டு, மலர் என வகைப்படுத்துகின்றனர்.

    அம்மாணவர்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப பாடப் பயிற்சி ஏடு வழங்கப்பட்டு சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு சார்ந்த வகுப்பாசிரியரால் தமிழ்நாடு பள்ளிக் கல்வி செயலி வழியாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க நிலை) திராவிட செல்வம், திருநாவுக்கரசு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×