search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சந்திரயான்-3 திட்டம் வெற்றி:  பெரியாம்பட்டியில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
    X

    பா.ஜ.கவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காட்சி.   

    சந்திரயான்-3 திட்டம் வெற்றி: பெரியாம்பட்டியில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

    • சந்திரயான்-3 திட்டம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவி தொடங்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
    • இந்திய நாட்டின் வெற்றியை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரு கின்றனர்.

    தொப்பூர்,

    இந்திய நாட்டை வல்லரசு நாடுகள் மத்தியில் மிகப்பெரிய மைல் கல்லை யும் வெற்றி சரித்திரத்தையும் படைக்க வைத்து உலக நாடு களை திரும்பிப் பார்க்கும் வகையில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் தனது அடுத்த வெற்றி மைக் கல்லை தொடங்கியது.

    சந்திரயான் ஒன்று, இரண்டு படிகளை தொட ர்ந்து சந்திரயான்-3 திட்டம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவி தொடங்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் இந்திய நாட்டின் வெற்றியை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரு கின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழி பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் இந்திய நாட்டில் இஸ்ரோவின் வெற்றி சரித்திரத்தை பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி னர்.

    இந்த வெற்றி கொண் டாட்டத்தில் பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு சந்திர யான்-3 வெற்றியை பதிவு செய்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து அவர்களின் சாதனைகளை பாராட்டி இந்தியாவின் அசோக சின்னத்தை நிலவில் பதிய வைத்ததை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழி பிரிவு, மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கட்சி தொண்டர்கள், ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×