search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சங்கராபுரம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • திருவிழா நடைபெறாமல் இருந்தது.
    • புதிய தேர் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த சேஷச முத்திரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தேர் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னர் சில காரணங்களால் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு புதிய தேர் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கோவிலில் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சக்தி அழைத்தல், ஊரணி பொங்கல், தேர் வெள்ளோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர், தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்த டைந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் சேஷசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழு வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.தேர் திருவிழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

    Next Story
    ×