search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெம்மேலியில் பராமரிப்பு பணி எதிரொலி: ஜூன் 2 வரை ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம்
    X

    நெம்மேலியில் பராமரிப்பு பணி எதிரொலி: ஜூன் 2 வரை ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம்

    • சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும்.
    • ஜூன் 2 ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர குடிநீர் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைவுதற்கு முன்னதாக நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார் பணிகள் மற்றும் நிலைய பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வரும் 24-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வரை (மொத்தம் 10 நாட்களுக்கு மட்டும்) மண்டலம்-9 (பகுதி), மண்டலம்-13(பகுதி), மண்டலம்-14 மற்றும் 15-க்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என அளித்துள்ளது.

    எனவே, பொதுமக்கள் மேற்கூறிய குடிநீர் விநியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எவ்வித தடையும் இன்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×