search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீத நிதி பகிர்வை அளிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். அவற்றில்

    * தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்திக்கு விழா எடுப்பது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது, தொடர் ரெயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததது, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    * கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை மத்திய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    * 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரசாரத்தை இப்போதே தொடங்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொடங்க வேண்டும்.

    * திமுக அரசின் திட்டங்களால பயனடைந்தவர்கள் 2026-ல் திமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள்.

    * இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீத நிதி பகிர்வை அளிக்க வேண்டும்.

    * மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு 50 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



     



    • காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறினர்.
    • கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறினர்.

    மேலும் நீதிபதிகள் அளித்த உத்தரவு தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு கூறுகையில், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். தமிழக காவல்துறையின் தலையீடு இருக்கக்கூடாது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கவும் இவ்வழக்கில் தமிழக காவல்துறையினர் எவரும் தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மூடிமறைக்க முயன்ற தமிழக அரசின் செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார். 

    • அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழங்கியது

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.

    அதன்படி, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழங்கியது. அதில், கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். 

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்து கொண்டே வந்ததை பார்க்க முடிந்தது.

    கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. அதன் பின்னர் விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 17-ந் தேதி ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 935-க்கும், ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இடைபட்ட 17 நாட்களில் சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 600 வரை குறைந்திருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு பிறகு, போர் பதற்றம் சற்று குறைவதாக தெரிந்த நிலையில், தங்கம் விலை குறைந்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் விலை ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து இருந்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 995-க்கும், ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 56,920-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,520

    18-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    17-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    16-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    15-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    18-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    17-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    16-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    15-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    • மதியம் 1.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை ரத்து.
    • பராமரிப்பு பணி காரணமாக பகுதிநேர ரத்து.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரெயில் நிலையங்களில் இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரையில் மதியம் 1.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதிநேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பகலில்

    சென்னை கடற்கரையில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை காலை 11.40, மதியம் 12.20, 12.40, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை மதியம் 1.45, 2.20 மாலை 3.05, 4.05, 4.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இரவில்...

    இதேபோல, சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரெயில் நிலையங்களில் இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரையில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருக்கிறது.

    இதனால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலும், செங்கல்பட்டில் இருந்து இதேதேதியில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகின்றன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நாளை(நவ. 20) விசாரணைக்கு வருகின்றன. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தர்காவிற்கு சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கி வருகிறது.
    • தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கோரிக்கை ஏற்பு.

    நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது."

    "அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.11.2024) முகாம் அலுவலகத்தில், இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் சையது முகமது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்."

    "இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் விஜயராஜ் குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் நாகூர் ஏ.எச். நஜிமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்," என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்.

    பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "எல்.ஐ.சி. இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!"

    "இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அதன் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையினரைக் ஏமாற்ற எவ்வளவு தைரியம்? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
    • பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.

    இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.

    எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.

    மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.

    அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார். 

    • 1.5.2021 முதல் 30.10.2024 வரை 2,538 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • இதுவரை 1,415 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.07 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் குறைந்த பட்சம் 10-20 சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து பகுதி மற்றும் வார்டு அளவில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள குழுக்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களின் பயன்கள் மற்றும் மானிய உதவிகளை பெறவும் இது வழிகாட்டுகிறது.

    1.5.2021 முதல் 30.10.2024 வரை 2,538 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 6 மாதங்கள் சிறப்பாக செயல்பட்ட, கூட்டமைப்புகளுக்கும் சுழல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,415 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.07 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.

    வங்கியில் 317 திட்ட முன் வரைவுகள் சமர்பிக்கப்பட்டு இதுவரை 277.97 கோடி ரூபாய் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் 3,145 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, 1,929 பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1,11,979 குழந்தைகள் பயன் அடைகின்றனர்.

    சிறு, குறு உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 7,019 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.27.08 கோடி ரூபாய் மூலதன ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    இதனால் இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    25-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
    • மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடலில் தாமதமான தீவிர சூறாவளி புயல்கள், இந்திய பெருங்கடலில் வலுவான சலனங்கள் உருவாகாதது போன்ற காரணங்களால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    வருகிற 20-ந்தேதிக்கு (நாளை) பிறகு கடல் சார்ந்த அலைவுகள் இந்திய பெருங்கடலுக்கு சாதகமாக அமையும் என்பதால், இம்மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதி வரை அடுத்தடுத்த புயல் சின்னங்களை வங்கக்கடலில் உருவாக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும், வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு- வடமேற்கில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு. 21-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று சுழற்சி உருவாக கூடும். மேலும் இது மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

    இதனால் வருகிற 25-ந்தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×