என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இன்று காலை டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு டெல்லி செல்கிறார்.
- ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்வதாக தகவல்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
நாடு முழுவதும் பா.ஜ.க. 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முழு தொகுதிகளை கைப்பற்றினாலும் உத்தர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு டெல்லி செல்கிறார்.