search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மீனவர்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
    X

    தூண்டில் வளைவு அமைக்கப்படும் இடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்ட காட்சி. 

    மீனவர்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

    • தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை
    • கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்டமணப்பாடு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மீன்பிடித் தொழிலுக்கு பெரும் இடையூறாக கடற்கரையில் இயற்கையான முறையில் பெரும் மணல் குன்றுகள் தோன்றின.

    இதனால் மீனவர்கள் கடலுக்குகள் படகுகளை கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீன்பிடித்தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டது.

    இதையறிந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ராட்சத எந்திரங்கள் மூலம் மணல் குன்றுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். எனினும் மணல் குன்றுகள் உருவாகுவது குறையவில்லை.

    இதையடுத்து நிரந்தரத் தீர்வாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தமிழக முதல்-அமைச்சரிடம் அமைச்சர் தெரிவித்ததையடுத்து நபார்டு மூலம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    கடலுக்குள் தூண்டில் வளைவு அமைக்கப்படும் இடத்தை நேற்று மாலை அமைச்சர் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் நேரில் படகு மூலம் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மீனவர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மீனவர்களின் மீன்பிடித் தொழில் தடைஇன்றி சிறப்பாக நடைபெற்று அவர்களின் பொருளாதாரம் மேம்பட தூண்டில் வளைவு திட்டப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும்.நான் படகு மூலம் கடலுக்கு சென்று ஆய்வு செய்து வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராஜ், செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, தயாநிதி, தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா,

    தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் லெபோரின், மணப்பாடு ஜெயப்பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, இளங்கோ, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மணப்பாடு மீனவர்கள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×