search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட மாவட்ட செயலாளர் அறிக்கை
    X

    முதல்-அமைச்சர் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட மாவட்ட செயலாளர் அறிக்கை

    • மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    அரூர்,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளைகள் முழுவதும் கட்சி கொடிகள் ஏற்றி இனிப்பு வழங்கி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்.

    மேலும் மார்ச் 1-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் ேநரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதுடன் அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும், மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×